விருது நகர் மற்றும் மதுரையில், வரும், 15ம் தேதி, காமராஜர் பிறந்த தினவிழா, கொண்டாடப்பட இருந்தது. அதில், பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொள்ள இருந்தார். இந்நிலையில் அமித் ஷா வருகை, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:
நாட்டுக்காக உழைத்த தேச பற்றாளர்களை, பா.ஜ.க, தொடர்ந்து போற்றிவருகிறது. அந்தவகையில், கல்விக்கண் திறந்த காமராஜரின், 113வது பிறந்த தினவிழா, வரும், 15ம் தேதி, மதுரையிலும், விருதுநகரிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க, தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்ள இருந்தார். ஆனால், அன்றைய தினம், நிலம் கையகப் படுத்தும் சட்டம் தொடர்பாக, முதல்வர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடக்கிறது.
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், தமிழகம் வருவதாக இருந்த அவரது பயணம், ரத்து செய்யப் பட்டுள்ளது.
இருப்பினும் , தமிழகத்தில் நடக்க உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும், சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் நடக்கும் நிகழ்ச்சிகளில், அமித் ஷாவுக்கு பதிலாக, மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.