ரஷியா, மத்திய ஆசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை இரவு நாடு திரும்பினார்.
தில்லி வந்த பிறகு, இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய ஆசிய பிராந்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்து வதற்காக மத்திய ஆசியாவில் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை முடித்து விட்டு, நாடு திரும்பி யுள்ளேன்.
இந்தியா, மத்திய ஆசிய நாடுகள் இடையே வலுவான நட்புறவு நிலவுவது, இப்பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளின் எதிர் கால நலனுக்கு முக்கியமானதாகும் என அந்தபதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷியா, துர்க்மீனிஸ்தான், கிர் கிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் சுற்றுப் பயணம் செய்தார்.
ரஷியாவில் மேற்கொண்ட பயணத்தின் போது, அந்நாட்டின் உஃபா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பு உச்சிமாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு ஆகியவைகளில் பங்கேற்றார். அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மீனிஸ் தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின்போது அந்நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.