மத்தியப் பிரதேசம் மாநில தேர்வுவாரியமான 'வியாபம்' ஊழல் தொடர்பான சர்ச்சைகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டதொடரை நிலைகுலைத்து வரும்வேளையில் இந்த ஊழலை ஆயுதமாக கையில் ஏந்திபோராடிவரும் காங்கிரஸ் கட்சிமீது மத்தியப் பிரதேசம் மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பகிரங்க தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளார்.
வியாபம் ஊழல் தொடர்பான ஊழல் விசாரணை சிபிஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் முதன் முறையாக நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவராஜ்சிங் சவுகான், மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் மீது நேரடியாகவே வார்த்தைகளால் நெருப்புமழை பொழிந்தார்.
சாதாரண விவசாயியின் மகனான நான் இந்தமாநிலத்தின் முதல் மந்திரியாக இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்க வில்லை. அதனால், என்னை பதவியில் இருந்து இறக்க காங்கிரசார் சதிசெய்து வருகின்றனர்.
அரசு பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க 'வியாபம்' முறையை அறிமுகப் படுத்தினோம். அதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்ததையடுத்து, சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்து, விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.
ஆனால், இதைபற்றி எல்லாம் கவலைப்படாத காங்கிரசார் என்னை பதவியைவிட்டு இறக்குவதிலேயே குறியாக கங்கனம்கட்டி போராடி வருகின்றனர். நான் பதவியைவிட்டு விலக வேண்டுமா? என்பதை மக்களாகிய நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.
காங்கிரஸ்காரர்கள் எப்போதுமே மற்றவர்களின் அடி வயிற்றின்மீது எட்டி உதைக்கும் கெட்டப்பழக்கம் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக, திக்விஜய்சிங், பிறவியிலேயே சதி குணங்களுடன் பிறந்த சதிகாரர் என்று சிவராஜ்சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.