பஞ்சாப் மாநிலம் குர்தாஸ் பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தே ஊடுருவியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவை குறைத்து மதிப்பிட்டால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
, "இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்க கூடிய செயல்களில் ஈடுபடும் எதிரிகளின் நோக்கங்கள் ஒரு போதும் நிறைவேறாது.
இதில் அரசு எப்போதும் உறுதியுடன் இருக்கிறது. தீவிரவாதத்தை வேரோடு அழிக்கவேண்டும் என்பதில் அரசு கவனத்துடன் உள்ளது. எல்லை தாண்டிய பயங்கர வாதத்தால் இந்தியாவுக்கு ஆபத்து உருவாகும் என்றால் அதனை கண்டு அரசு அமைதியாக இருந்து விடாது.
கடந்த 2013 ம் ஆண்டு அப்போதய உள்துறை அமைச்சராக பதவிவகித்த ப சிதம்பரம், இந்து தீவிரவாதம் என்ற புதிய சொல்லியலை பயன் படுத்தி, விசாரணையின் கோணத்தை மாற்றினார்.
இது தீவிரவாதத்துக்கு எதிரான நமதுபோரை பலவீனப் படுத்திவிட்டது. இதன் விளைவாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி ஹபீஸ்சயீத் அப்போதய உள்துறை அமைச்சரை பாராட்டினார். தீவிரவாதம் தீவிரவாதம் தான், அதற்கு மதமோ, சாதியோ கிடையாது".
இந்தியாவில் கடந்த 2008 ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்ட தீவிரவாதி ஹபீஸ்சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவிவருகிறார். இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி ஆத்திரமூட்டும் பேசி வரும் ஹபீஸ் சயீத், இந்தியாதேடும் தீவிரவாதிகளின் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ளார்
ஜூலை 27ம் தேதி பஞ்சாபில் தாக்குதல் நடத்து வதற்காக அதிநவீன ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் அணியும் உடையோடு வந்து குர்தாஸ் பூர் காவல் நிலையத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். காலை 5.30 மணிக்கு ஆரம்பித்த சண்டை அடுத்த 12 மணிநேரத்துக்கு நீடித்தது. இறுதியில் நமது வீரர்களால் 3 தீவிரவாதிகளும் கொல்லபட்டனர்.
தீவிரவாதி களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள், 2 ஜி.பி.எஸ் கருவிகள், 19 பத்திரிகை குறிப்புகள் கைப்பற்றபட்டன. அவை அனைத்தும் ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் 3 பொதுமக்கள், 3 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ஒருபோலீஸ் அதிகாரி பலியாகினர். மேலும், 10 பொதுமக்களும் 7 பாதுகாப்புப்படை வீரர்களும் காயமடைந்தனர். இந்ததாக்குதல் சம்பவத்தில் மரணடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் அவையில் தெரிவிக்கப்பட்டது.
எல்லையைக் காக்கும் பணியில் ராணுவத்தினர் தங்களது உயிரையும் பணயம்வைத்து பாதுகாக்கின்றனர். அடர்ந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் சிரமம் இருந்து வருகிறது. எல்லையில் பாயும் நதிகளில் அதிக வெள்ளப் பெருக்கு இருந்தபோது அதனை பயன் படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
பஞ்சாபின் தாஷ்பகுதியில் ராவி நதி பாகிஸ்தானை அடையும் பகுதியிலிருந்து தக்க சந்தர்பத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
5 முறை இந்த ஊடுருவல் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டது. இதில் பஞ்சாப் போலீஸாரின் பங்கு பாராட்டுக் குரியது. இந்த ஆபரேஷனை முன்னின்று நடத்திய துப்பறியும் போலீஸ் கண்காணிப்பாளர் பல்ஜீத்சிங் வீர மரணம் அடைந்தார்.
இந்த ஆபரேஷன் நடந்த போது பாதுகாப்புப் படை வீரர்களும் ராணுவத்தினரும் உச்சகட்ட கண் காணிப்பு பணியில் எல்லையை காத்துவந்தனர்" என்றார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.