இந்தியா-பாகிஸ்தான் இடையே தேசியபாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை, டெல்லியில் 23-ந்தேதி தொடங்குகிறது.
பிரதமர் மோடி, ரஷியாவில் உபா நகரில் நடந்த 'பிரிக்ஸ்' உச்சிமாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றுக்கு சென்றிருந்த போது, அங்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சென்ற மாதம் 10-ந் தேதி சந்தித்து பேசினார்.
அப்போது இருநாடுகளுக்கும் இடையே உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கும், இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் சந்தித்து பேசுவதற்கும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, டெல்லியில் இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை 2 நாட்கள் நடக்கிறது. இந்த பேச்சு வார்த்தை 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலும், பாகிஸ்தான் சார்பில் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை ஆலோசகருமான சர்தாஜ் அஜிசும் கலந்துகொள்கிறார்கள்.
இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் சர்தாஜ் அஜிஸ், "23-ந் தேதியும், 24-ந்தேதியும் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்த இந்தியா தகவல் தெரிவித்துள்ளது" என கூறியதாக பாகிஸ்தான் ரேடியோ தெரிவித்தது.
அதே நேரத்தில், இது குறித்து பாகிஸ்தான் இன்னும் இறுதி செய்ய வில்லை என்றும், பேச்சுவார்த்தையின் போது இடம்பெற வேண்டிய அம்சங்கள் பற்றி முடிவு செய்ய வில்லை என்றும் சர்தாஜ் அஜிஸ் கூறியதாக பாகிஸ்தான் ரேடியோ தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லை தாண்டிய தீவிரவாதம், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாகி உர்ரகுமான் லக்விக்கு பாகிஸ்தான் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பிறபாதுகாப்பு விஷயங்கள், எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.