மாணவர்கள் உணர்ச்சி பொங்கி எழுவதை எந்த சக்தியாலும் தடுகக முடியாது

 தமிழகத்தில் மது ஒழிப்புப் போராட்டங்கள் தீவிரமடையது வருகிறது. அரசியல் கட்சிகளையும் மீறி பொதுமக்களும் மாணவர்களும் இப்போராட்டங்களில் ஈடுபடும் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

தமிழகத்தில் நிலவும் இத்தகைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாக் கட்சியும் போராடிக் கொண்டிருக்கும்போது அரசு அதற்கான எநத பதிலையோ, முயற்சியையோ அதிகாரப் பூர்வமாக தெரிவிக்காமல் இருப்பது வருத்தமே. அரசு உடனே சர்வக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்தறிய வேண்டும்.

இன்று போராட்டங்களில் பல திசைகளில் பலக் கட்டுப்பாடுகளை மீறி ..பரவிகொண்டிருக்கிறது. காவல்துறை கட்டுப்பாட்டை கட்டவிழ்த்துவிட்டு தடிஅடி நடத்தும் சூழ்நிலை பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. பதற்றமாக சூழ்நிலை இருக்கும் இடங்களில் கூட கடையை மூடாமல் வீம்புக்கிருப்பது அங்கு அசம்பாவித சம்பவமாக நடைபெறுகிறது. அரசும் காவல்துறையும் அசட்டையாக நடந்து கொள்கிறது.

இன்று தமிழகம் போய்க்கொண்டிருக்கிற நிலைமை மதுவிலக்கில்லாத தமிழகம் சாத்தியமில்லை என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது. இதில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அரசு தெரியப்படுத்த வேண்டும்.

குடிக்கும் மக்களுக்காக அவர்களைப் பாதுகாக்க படிக்கும் மாணவர்கள் களத்தில் குதித்திருக்கிறார்கள் அவர்களின் சமூக அக்கறை பாராட்டுக்குரியது. ஆனால் குடிப்பதற்கு எதிரான போராட்டத்தில் அடிப்பதற்குத் தயங்காத காவல்துறையினரிடம் அவர்கள் வாங்கும் அடி அடிமனதைத் தொடுகிறது, வருத்தமளிக்கிறது. அதனால் தயவு செய்து அரசியல் கட்சித்தலைவர்கள், மாணவர்களை உணர்ச்சியைத் தூண்டி வகுப்பறைக்கு வெளியே வந்து போராடுங்கள் என்று அழைப்பது ஏற்புடையது அல்ல. ஆனாலும் மாணவர்கள் உணர்ச்சி பொங்கி பொங்கி எழுந்தால் அதைத்தடுகக எந்த சக்தியாலும் முடியாது.

அதனால் அரசு உடனே என்ன செய்யப்போகிறது என்பதை உடனே தெரியப்படுத்த வேண்டும். பெண்கள் காயப்படாமல் கடுமையாக போராடுவோம். மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டும். ஆண்கள் குடிப்பதை நிறுத்திப்பழகி இப்போதே அரசாங்கத்திற்கு விற்பனைக் குறைவை ஏற்படுத்தி மதுக்கடைகளால் லாபமில்லை என்ற நிலைக்கு அர…. திகைக்கும் அளவிற்கு மதுவை விலக்கி விலகி இருக்க
வேண்டும்.

அரசியல் கட்சிகள் வன்முறைக்கு வித்திடாமல் வரம்பு மீறாமல், சட்டத்தைக் கையிலெடுக்கலாம் சட்டப்படி போராடி கடைகளை மூட ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் அரசின் பண மிக முக்கியமானது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சர்வக்கட்சி கூட்டம் வேண்டும்.

பல்லாயிரக்கோடி வருமானம் வருகிறது என்பதற்காகத் தெருக்கோடியில் வாழும் மனிதனின் உயிரைக் குடிக்கும் குடிக்குப்பதிலாக வருமானம் கொடுக்கும் திட்டங்கள் உடனே ஆராயப்பட வேண்டும்.

கொள்ளை போகும் மணல், வியாபாரமாகும் கல்வி, களவாடப்படும் கனிமவளம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி எப்படி அரசாங்கத்திற்கு நேர்மறை வருமானம் வரும் எனச்சிந்திக்க வேண்டும். குடித்துப் பழகியவர்கள் உடனே இந்தப் பழகத்தில் இருந்து விடுபட உடனே போதைத் தடுப்பு மையங்கள் நிறுவப்படவேண்டும்.

இப்படி நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்காமல் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல. பாஐக வைப் பொறுத்தவரை சென்ற ஜீலை மாதம் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி 504 இடங்களில் ஒரே நேரத்தில் 36000 பேர் கலந்து கொண்டு 16000 பேர் கைதானோம்.

அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த மாதம் 10ஆம் தேதி மதுவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்ட.ம நடைபெற 2 நாட்களுக்கு முன்னரே அறிவித்து விட்டோம். இலவசமாக போதைத்தடுபபு மையம் ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். மதுவினால் வரும் தீமைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல துண்டு பிரசுரங்களை விநியோக இருக்கிறோம்.

அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்காமல் பாஜக மற்ற மாநிலங்களில் மதுவிலக்கை கொண்டுவருமா எனக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இயதியாவிலேயே அரசாங்கமே இலக்கு வைத்து குடிப்பவர்களை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி ஏழைகள் அதிகம் இங்கு பாதிக்கப்படுவதாலும் குடிப்பழகத்தினால் ஏற்படும் சாலை விபத்துக்களிலும், சமூக விரோத நடவடிக்கைகளிலும் தமிழகம் முன்னிலை வகிப்பதால், தமிழகத்தில் உடனே மதுவிலக்க கொண்டு வரவேண்டும் என்று நம் மாநிலம் மீது அக்கறை வைத்து நாங்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

சகோதரர் ஸ்டாலினோ மதுக்கடைகளை மூடப்பட்டால் தங்களைச் சார்யதவர்களின் மது ஆலைகளும் மூடப்படும் என்ற காமன்ஸென்ஸ் கூட இல்லை என்று சாடுகிறார். மதுக்கடைகளை மூடும் அதிகாரம் அரசிடம் உள்ளது. ஆனால் தங்களைச் சார்யதவர்களின் கடையையும் ஆலைகளையும் மூடும் அதிகாரம் அவர்களைச் சார்யதவர்களிடமே உள்ளபோது அதை மூடினால் என்ன என்ற கேட்பது …. கேட்கும் கேள்வி எனவே எனப்படுகிறது. ஆக மதுவிலக்கு இன்று அரசியலாக்கப்பட்டிருக்கிறதோ இல்லையோ அவசியமாக்கப்பட்டிருக்கிறது.

நன்றி; டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...