இந்தியாவின் சுதந்திரதினம் வருகிற 15–ந்தேதி (சனிக்கிழமை) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
பிரதமர் உரையின் போது பொதுவாக நாட்டின் பல துறை வளர்ச்சிகள் பட்டியலிடப்படும். சில புதிய அறிவிப்புகளும் இடம் பெறும். இந்த புதிய அறிவிப்புகளுக்கான யோசனைகளை நாட்டுமக்களிடம் இருந்த பெற பிரதமர் முடிவுசெய்தார்.
இதையடுத்த பிரதமர் சுதந்திரத் தினத்தன்று என்னென்ன திட்ட அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது பற்றி பிரதமர் அலுவலக இணையத் தளத்தில் கருத்து தெரிவிக்கலாம் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை பார்த்ததும் ஆயிரக் கணக்கானவர்கள் போட்டி போட்டு பிரதமருக்கு தங்கள் யோசனைகள், கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
தினமும் 500 முதல் 600 பேர்வரை பிரதமரின் சுதந்திரதின பேச்சுக்கு யோசனைகள் அனுப்பி வருகிறார்கள். இது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஓரிருநாட்கள் மட்டுமே மக்களின் யோசனை ஏற்கப்படும். அதன் பிறகு மக்களின் கருத்துக்கள் தொகுக்கப்படும். பெரும் பாலானவர்கள் தெரிவிக்கும் ஒருமித்த யோசனைகளை ஏற்றுக்கொள்ள பிரதமர் மோடி முடிவுசெய்துள்ளார்.
இதுவரை பிரதமருக்கு கருத்து தெரிவித்து ள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே அப்துல்கலாமை கவுரப்படுத்தும் வகையில் பிரதமர் புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களில் சிலர் வட கிழக்கு மாநிலங்களில் பாராளுமன்ற கூட்டத்தைகூட்ட யோசனை தெரிவித்துள்ளனர். சிலர் நாட்டின் தலை நகரை ஆண்டுக்கு 2 மாதம் டெல்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் ஏதாவது ஒருபகுதிக்கு மாற்றவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.