பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க ஏழு அம்ச திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். வங்கி தலைவர்களை நியமிப்பது, வங்கிவாரிய தலைமையிடம் நிதி, கடன் நெருக்கடியை குறைப்பது, அதிகாரம், செயல்பாடுகளைக் கணக்கிடுதல் மற்றும் சீர்திருத்தம் உள்ளிட்ட ஏழு அம்சத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மிஷன் இந்திரதனுஷ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத் துறை வங்கிகளின் பங்கு இன்றி அமையாதது. கடந்த சில வருடங்களாகவே பொதுத்துறை வங்கிகள் பிரச்சினையில் இருக்கின்றன.
ஒவ்வொரு காலத்திலும் தேவையான உதவியை மத்தியஅரசு செய்துவருகிறது. பதற்றம்கொள்ளும் அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிலைமை இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். 13 பொதுத் துறை வங்கி களுக்கு நடப்பு நிதி ஆண்டில் 20,058 கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்யப்படும். எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக ரூ.5,511 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ.2,455கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.2,229 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,732 கோடி மற்றும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் ரூ.2,009 கோடி முதலீடு செய்யப்படும். தவிர வங்கி வாரிய தலைமை அமைக்கப்படும்.
ரிசர்வ்வங்கி கவர்னர் தலைமையில் இவை செயல்படும். வங்கித் தலைவர்களை நியமிப்பது, பொதுத்துறை வங்கிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணியை இந்தஅமைப்பு செய்யும் என்றார். 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த அமைப்பு செயல்பட தொடங்கும். 1969-ம் ஆண்டு வங்கிகள் பொதுவுடமை ஆக்கப்பட்டதற்கு பிறகு செய்யப்படும் மிகப் பெரிய சீர்திருத்தம் இது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். ஐந்து பொதுத் துறை வங்கிகளுக்கான தலைவர்களும் அறிவிக்கப்பட்டனர். நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா இதனை அறிவித்தார்.
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் தலை வராக மைக்ரோசாப்ட் இந்தியா வின் முன்னாள் தலைவர் ரவி வெங்கடேசன் நியமிக்கப் பட்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் ஆறு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஐந்து பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை தவிர இரண்டு பொதுத் துறை வங்கிகளுக்கு தலைமை செயல் அதிகாரிகளையும் மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. முதல்முறையாக தனியார் வங்கிகளில் பணிபுரிந்தவர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.