பிரதமர் மோடி – தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இடையிலான சந்திப்பை விமர்சனம் செய்துபேசிய இளங்கோவனுக்கு பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் அரசுவிழா ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி, போயஸ் கார்டன் சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துபேசினார். இந்த சந்திப்பினை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக கூறி, . பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பாரதீய ஜனதா சார்பில் நடந்தபோராட்டத்தில் கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துக்கொண்டார்.
போராட்டத்தில் பேசிய தமிழசை சவுந்தர ராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு கடும்கண்டனம் தெரிவித்தார்.
காமலை பிடித்தவர்கள் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாக தெரியுமாம்… வக்ரபுத்திகொண்ட இளங்கோவனுக்கு எல்லாம் வக்ரமாகவே தெரியும்… அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாக தான் தெரியும்.
நேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவர், இளங்கோவனை இதுவரையில் ஒருவருக்கும் தெரியாமல் இருந்தது என்றும் தற்போது 7 கோடி தலைவர்களுக்கும் தெரிந்துவிட்டது என்றும் கூறினார். பெண்ணை இவ்வாறு பேசிய இளங்கோவனை தற்போது 120 கோடி பேருக்கும் தெரிந்துவிட்டது. இத்தகைய கீழ்தரமான விளம்பரம் தேவையா? சாக்கடையை பூசிவிட்டு அனைவருக்கும் தெரியும் என்றால் எப்படி இருக்கும். அப்படிதான் இருக்கிறது. என்று தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதற்காக மன்னிப்புகேட்க வேண்டும்? என்றும், எந்த போராட்டத்தையும் சந்திக்க தயார் என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ்தலைவர் குஷ்பு கூறினார்.
குஷ்புவின் பேட்டி தொடர்பாக பேசிய தமிழிசை, குஷ்புவின் பாராட்டுகளை பெறுவதற்காக இளங்கோவன் இப்படிபேசுகிறார் என்று விமர்சனம் செய்தார்.
திசைதிருப்ப போராட்டம் என்று பேசுகிறார். இளங்கோவான் கூட்டத்தில் பேசியது எதற்கு, மதுவிலக்கு தொடர்பானது. அங்கு மது விலக்கு தொடர்பாக பேசவேண்டியது தானே. இருதலைவர்கள் சந்திப்பு தொடர்பாக ஏன்? பேச வேண்டும்.
இளங்கோவன் என்பவருக்கு கட்சிமீது உண்மையான எண்ணம் இருந்தால், பலப்படுத்த வேண்டும். எதோ உளரவேண்டும், அதனால் வளரவேண்டு என்ற எண்ணம் இருக்க கூடாது. சோனியா காந்திக்கு கேள்வி எழுப்பிய தமிழிசை, இளங்கோவன் மற்றும் குஷ்புவை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இளங்கோவனை உடனடியாக நீக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்புவையும் நீக்க வேண்டும்.
இளங்கோவன் பேச்சு ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிப்பது ஆகும். பெண்களை இழுவு படுத்துகிறார். அரசியலில் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு முன்னேறி உள்ள நிலையில், ஆண் தலைவர் ஒருவர் இப்படிபேசினால் எந்த பெண் உரிமையாக அரசியலுக்கு வருவார், காங்கிரசுக்கு வருவார்கள்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு விரைவில் இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதஉள்ளேன். காங்கிரஸ் தலைவராக இருக்கும் நீங்கள் (சோனியா காந்தி) எப்படி இதனை சகித்துக் கொள்ள முடியும். நீங்கள் பெண் தலைவர் மற்றும் பெண்களை பாதுகாப்பவர் என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழிசை கூறினார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.