சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ்கட்சி 50 ஆண்டுகாலம் நமது நாட்டை ஆண்டுள்ளது. ஆனால் இதன்மூலம் காங்கிரஸ் என்ன சாதித்தது, என மத்திய நகர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லி கூடத்தில் நேற்று மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, ஸ்மிருதி இராணி, சுஜனாசவுதரி, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் என்ஐடி தொழிற் கல்வி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
இந்தவிழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
சுதந்திரம் வந்ததில் இருந்து காங்கிரஸ்கட்சி சுமார் 50 ஆண்டு காலம் நமது நாட்டை ஆண்டுள்ளது. ஆனால் எந்த பிரயோ ஜனமும் இல்லை. எந்தவித வளர்ச்சியும் இல்லை. தொலை நோக்கு பார்வையில்லாமல் ஆந்திர மாநில பிரிவினை நடைபெற்றது. ஆந்திராவுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் கட்டாயமாக நிறைவேற்றப்படும். இதில் யாருக்கும் சந்தேகம்வேண்டாம். ஆனால் சில அரசியல் கட்சிகள் இதனை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கின்றன.
பிரதமர் மோடி குறித்து சிலர் தேவையில்லாமல் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினருக்கு இதுவே வேலையாகி விட்டது. இத்தனை நாட்கள் ஆட்சியில் இருந்து பதவி போன பின்னர், அந்த வேதனையில் பேசுகின்றனர் என்பது எங்களுக்கு நன்றாக புரிகிறது. மோடி குறித்து பலநாடுகள் புகழ்ந்து பேசுகின்றன. ஆனால் இங்குள்ள சில கட்சியினருக்கு வேதனையை அளிக்கிறது.
முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆந்திர மாநிலத்தை நாட்டிலேயே வளர்ச்சிபெற்ற மாநிலமாக மாற்ற தீவிரம்காட்டி வருகிறார். அவரது உழைப்பை காணும் போது அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். சிலர் நான் ஆந்திராவில் காலடிவைக்க அனுமதிக்க மாட்டோம் என கூறுகின்றனர். நான் ஆந்திராவுக்கு வந்தால் சிலவளர்ச்சி பணிகள் நடக்கும். இல்லையேல் எதுவும் நடக்காது என்பது என்னை விமர்சித்த வர்களுக்கே தெரியும்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இருபுதிய மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அரசியலில் மக்கள் ஆதரவுதேவை, வாரிசு அடிப்படையில் நீண்டகாலம் யாரும் அரசியலில் தாக்குபிடிக்க முடியாது. இவ்வாறு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாவது:
ஆந்திர மாநிலத்தை கல்வித்தரம் வாய்ந்த மாநிலமாக உருவாக்க வேண்டுமென முதல்வர் சந்திர பாபு நாயுடு கருதுகிறார். அதற்கு தகுந்தவாறு இங்கு தற்போது தாடே பல்லி கூடத்தில் என்ஐடி மேற்கல்விக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பதியில் ரூ.700 கோடிசெலவில் அமைக்கப்படும் ஐ.ஐ.டி கல்வி மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது தவிர, விசாகப் பட்டினத்தில் ரூ.680 கோடி செலவில் ஐ.ஐ.எம் கல்விமையமும் அமைக்கப்படும்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.