ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைதுசெய்ய வேண்டும்

 பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகாசியில் நடந்த ஒருதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரம் வெகுவாக குறைந்துவருகிறது. கடந்த மாதம் ஐஐடி. சார்பில் நடந்த நுழைவுத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 451 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். மற்றவர்கள் தனியார்பள்ளியில் படித்தவர்கள்.

இதேபோல் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். 100 பேர்கூட இல்லை. கல்வி தற்போது வியாபாரமாகி வருகின்றது. மருத்துவப் படிப்புக்கு 2,800 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அதில் அரசுப்பள்ளியில் படித்த 100 பேருக்குகூட இடமில்லை என்றால் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் எப்படி முன்வருவார்கள்.

என்.எல்.சி. தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பாஜக கோரிவருகிறது. மதுவிலக்கு தொடர்பாக திமுக. அளித்துள்ள வாக்குறுதியினை நம்ப முடியாது. அந்தகட்சி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம்வராது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது பூரண மதுவிலக்கு அமலுக்குவரும்.

பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்திப்பை கிண்டல்செய்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எந்த நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்புகேட்கும் வரை அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடரவேண்டும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைதுசெய்ய வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக. அரசு மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...