வரும் டிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., தொலைவுக்கு புதிதாக சாலையமைத்து, நெடுஞ்சாலைகளின் மொத்ததொலைவை 1.5 லட்சம் கி.மீ., அதிகரிக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாக, நிதின்கட்காரி தெரிவித்தார்.
புதுடில்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து- நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: நாட்டின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மத்தியஅரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நெடுஞ் சாலையின் மொத்த தொலைவை 1.5 லட்சம் கி.மீ.,ஆக அதிகரிக்கப்படும். அதற்கு இன்னும் 50 ஆயிரம் கி.மீ., தொலைவு புதியநெடுஞ்சாலை அமைக்க வேண்டியுள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிமீ., தொலைவிலான இருவழிச் சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும்.
மின்சார பஸ்கள் : இஸ்ரோவுடன் இணைந்து, லித்தியம்-அயன்சேர்த்து தயாரிக்கப்பட்ட மின்கலன்களில் இயங்கவல்ல மின்சார பஸ்கள், தற்போது தயாரிக்கப் பட்டு வருவதாக தெரிவித்த கட்காரி, அடுத்த 6 மாதங்களில் டில்லியில் இதுபோன்று 15 பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.