சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் தரும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
நேற்று புது டெல்லியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புது டெல்லியில் நடக்கும், உலக இந்துபௌத்த மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள, சந்திரிகா குமாரதுங்கவை இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனியாக சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்பில், இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல், இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்திய பிரதமர் நரேந்திரமோடி, சிறிலங்காவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில், அமைதியான முறையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் வகித்துவரும் தலைமைத்துவ பங்கு மற்றும் இந்திய- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதில், சந்திரிகா குமாரதுங்க ஆற்றிவரும் பங்களிப்பை இந்திய பிரதமர், வரவேற்றுள்ளார்.
ஒன்றபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் எல்லா சமூகங்களினதும் எதிர்பார் ப்புகளை நிறைவேற்றும், மெய்யான நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு, சந்திரிகா தொடர்ந்தும், முக்கிய பங்காற்றுவார் என்று நரேந்திரமோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.