சட்ட மன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில் பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு பரப்புரை தீவிரமடைந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்துவந்தது.
குறிப்பாக தலித்சமூகத்தின் அடையாளமாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி, 32 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுவந்தார். இந்நிலையில், மஞ்சியின் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 25 தொகுதிகளும் ராஜ்யசபா உறுப்பினர்பதவியும் தருவதாக பாஜக உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக் ஜன சக்தி கட்சி தலைவரான மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், ராஷ்ட்ரிய லோக் சமதாவின் தலைவரான உபேந்திர குஷ்வாகா ஆகியோர் பாஜக முடிவுசெய்யும் தொகுதிகளில் தங்களது கட்சிகள் போட்டியிடும் என அறிவித்துள்ளனர்.
இதனால், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 முதல் 170 தொகுதிகள்வரை போட்டியிட பா.ஜ.க முடிவெடுத்துள்ளது. 73 முதல் 83 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கவும் பாரதிய ஜனதா மேலிடம் பரிசீலித்துவருகிறது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 100 தொகுதிகளிலும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 98 தொகுதிகளிலும் காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப் பட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளை ஏற்கமறுத்த சமாஜ்வாதி கட்சி, தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.