மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரது தபால் தலைகளை நிறுத்துவது என்று எடுத்தமுடிவு சரியானது தான் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நமது நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் தபால்தலைகள் இருக்க வேண்டும். ஒருகுடும்ப உறுப்பினர்களை மட்டும் கௌரவிக்கும் வகையில் இருக்கக்கூடாது. தபால்தலைகள் தொடர்பான அறிவுரைக்குழு அளித்த பரிந்துரைப்படி, ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபபாய் படேல், சிவாஜி, மௌலானா ஆசாத், பகத்சிங், ஜெய பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, விவேகானந்தர், மகா ராணா பிரதாப் ஆகியோரின் தபால் தலைகளை வெளியிட முடிவு செய்யபட்டுள்ளது.
தபால் தலைகள் வெளியிடுவது தொடர்பான வரிசையில், ஒருகுடும்பத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது தவிர, மற்றவர்களின் பெயர்களும் அந்த வரிசையில் உள்ளன. மகாத்மா காந்தி, மௌலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் பாபா ஆகியோரின் பெயர்களும் உள்ளன. ஆனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரிசையில், நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட ஜவாஹர்லால் நேரு உள்பட அனைத்து முக்கிய தலைவர்களும் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் நாங்கள் மிகவும் பரந்த மனதுடன் உள்ளோம். வேறு பட்ட சித்தாந்தம், அணுகு முறைகளைக் கொண்டவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம். அவர்கள் அனைவரும், நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.