சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 7 கோடியாக உயர்த்தவேண்டும்

 நவீன உள்கட்டமைப்பு வசதிக ளுடனும், குறைந்த செலவில் சுற்றுலாசெல்ல ஏதுவான நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வலியுறுத்தினார்.

நாட்டில் ஆண்டுக்கு 70 லட்சமாக உள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 7 கோடியாக உயர்த்தவேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஜன சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தீன தயாள் உபாத்யாயவின் நினைவாக, தில்லியில் ரூ.125 கோடியில் சுற்றுலா இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தவிழாவில் கலந்து கொண்டு அருண்ஜேட்லி பேசியதாவது:

இந்தியாவுக்கு ஆண்டு தோறும் 7 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மகேஷ்சர்மாவை கேட்டுக்கொள்கிறேன்.

எந்தெந்த நாடுகளில் இருந்து மிக அதிகமான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்களோ, அந்த நாடுகளில் சுற்றுலாமேம்பாட்டு அலுவலகங்களைத் திறக்கவேண்டும்.

சுற்றுலாத்துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் நோக்கில் விமான நிலையங்களை மத்திய அரசு நவீன மயமாக்கி வருகிறது. மேலும், ரயில்வே, நெடுஞ்சாலை போக்குவரத்து வசதிகளும் நவீனமாக மாற்றப்படுகின்றன. இந்தியாவுக்கு மிக, மிக அதிகமான விமானங்கள் வந்தால் தான் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரமுடியும். எனவே, விமான சேவையை 5 முதல் 10 மடங்குவரை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதேபோல், கப்பல் போக்கு வரத்தையும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், குறைந்தசெலவில் கிடைக்க கூடிய தங்கும் விடுதிகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டு வரும் வெளிநாட்டு பயணங்களின் பலனாக, சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்களதுதொழிலை விரிவுபடுத்த முன் வந்துள்ளன என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...