பீகார் சட்ட சபை தேர்தல் வரும் 12–ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜனதா கூட்டணிக்கும், ஆளும் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆட்சியைக் கைப்பற்ற இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று 8 மத்திய மந்திரிகளுடன் பீகார் சென்றார். பாஜக. பிரசாரத்தில் ஏற்பட்டுள்ள தொய்வுபற்றி கவலைதெரிவித்த அமித்ஷா, அதை ஈடுகட்ட புதிய வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருபதாவது:–
நிலம் இல்லாதவர்கள் வீடுகட்ட இலவசமாக நிலம் வழங்கப்படும். அந்த நிலத்தில் சொந்த வீடுகட்டிக் கொள்ள ஒவ்வொருவருக்கும் அரசு தேவையான உதவிகள் செய்யும்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் மிகச்சிறப்பான மதிப்பெண் பெறும் 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். சிறப்பாக படிக்கும் 5 ஆயிரம் மாணவிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள் வழங்கப்படும்.
கல்வி கடன்கள் 3 சதவீத வட்டியுடன் அளிக்கப்படும். 2022–ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கபட்ட குடி நீர், மின்சாரம் வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மாணவ–மாணவிகள் வெளிநாடு சென்று படிக்க தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு இணையத் தளத்தை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும் இவ்வாறு பாஜக. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.