சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர்,நில ஆக்கிரமிப்பாளர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியரை ஒடுக்குவதில் எந்த சமரசமும் இன்றி அரசு செயல்படுகிறது என்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஜம்முவின் கத்துவாவில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு, குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பயங்கரவாத சம்பவங்களை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். உள்ளூரில் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் ....