ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திரமோடி, தில்லியில் புதன் கிழமை (அக்டோபர் 28) சந்தித்து பேசுகிறார்.
இந்தியா-ஆப்ரிக்கா நாடுகள் இடையேயான மூன்றாவது உச்சிமாநாடு, தில்லியில் வியாழக் கிழமை (அக்டோபர் 29) நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப்ஜுமா, சுவாஸிலாந்து அரசர் ஸ்வதி, நைஜீரிய அதிபர் உள்பட 20 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித் தனியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
2008 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இது போன்ற மாநாடுகள் டெல்லி மற்றும் அட்டிஸ் அபாபா நகரங்களில் நடந்துள்ளன. ஆனால், இப்போதுபோல முன் எப்போதும் 54 நாட்டு முக்கிய பிரதிநிதிகளும் ஒன்றாகசேர்ந்து பங்கேற்கவில்லை. இதில் 40 பேர், அந்தந்த நாட்டின் மத்திய அல்லது மாநில அரசுகளின் தலைமை பதவிகளில் இருப்பவர்கள் என்பது இதில் சிறப்பு.
இந்த மாநாட்டால், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரஸ்பரபலன் கிடைக்கும். வணிகத் துறையில் கூடுதல்முதலீடு, பாதுகாப்புதுறை ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு, கடல் படை பாதுகாப்பில் ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, கல்வித்தர மேம்பாடு போன்றவை குறித்து இந்தகூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 36 ஆப்பிரி்க்க நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதமாக வளரும் வாய்ப் புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறும்நிலையில், இந்தியா அங்கு முதலீடுகள் செய்ய வாய்ப்பாக இது அமையும்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.