ராணுவத்தினர் தங்களது பதக்கங்களை திருப்பிதருவது சரியானது அல்ல, அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை வலியுறுத்தி மாஜி ராணு வத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவ்நதனர். காங்கிரஸ் அரசு நிறைவேற்றாத அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஜக அரசு, கடந்த சனிக்கிழமை அதற்கான அரசாணையை வெளியிட்டது.
அந்த ஆணையில், "2013-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கபடும் சராசரி ஓய்வூதிய தொகை அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினர் அனை வருக்கும் ஒரே சீராக ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதிய தொகை 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்யப்படும்” என்று தெரிவிக்கபட்டது. இந்நிலையில் ஓய்வூதிய திட்டத்ததை கண்டித்து பஞ்சாப், அரியானா மாநிலத்தை சேர்ந்த மாஜி ராணுவத்தினர் , தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கம் ,விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.
இரு மாநிலங்களில் முக்கிய நகரங்களில் நடந்துவரும் போராட்டமுகாமில் அவர்கள் பதக்கங்களை வழங்கினர்.இதுதொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கார் கூறியது, பதக்கங்களை திருப்பி தருவது சரியானதல்ல, அவர்கள் தவறாக வழிநடத்தபட்டு வருகிறார்கள். கடந்த காலங்களில் நாட்டை ஆண்ட காங். ஆட்சியில் செய்யாதகுறையை தற்போதைய அரசு செய்து முடிந்தளவு வாக்குறுதியை நிறைவேற்றி யுள்ளது. மாஜி ராணுவத்தினர் தங்களது குறைகளை , அரசு நியமித்துள்ள கமிஷனிடம் கூறலாம், அதைவிடுத்து போராட்டம் நடத்து சரியல்ல என்றார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.