பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட வடிவமைப்புக்கு ஏற்ற வாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம்வரை மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.
இந்தவீடுகள் கட்டுவதற்கான நிலங்களை அந்தந்த மாநில அரசுகள் வழங்கும். இத்திட்டத்தின்படி, தங்கள் மாநிலங்களில் மலிவுவிலை வீடுகள் கட்ட நிறையமாநில அரசுகள் மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பித்து இருந்தன.
இந்நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சக செயலாளர் நந்திதா சாட்டர்ஜி தலைமையில், அமைச் சகங்களுக்கு இடையிலான மத்திய ஒப்புதல் மற்றும் கண் காணிப்பு குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில், மாநில அரசுகள் சமர்ப்பித்த அறிக்கைகள் மீது ஆய்வு நடத்தபட்டது. அதன் இறுதியில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் நகர்ப் புற ஏழைகளுக்கு 2 லட்சத்து 28 ஆயிரத்து 204 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில், 2 லட்சத்து 17 ஆயிரத்து 747 வீடுகள், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கானவை ஆகும். மீதிவீடுகள், குறைந்த வருவாய் பிரிவினருக்கானவை ஆகும்.
கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் மத்திய அரசு ரூ.1½ லட்சம் நிதிஉதவி அளிக்கும். இதன் மூலம், மொத்தம் ரூ.3 ஆயிரத்து 231 கோடி வழங்கும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், நிலத்தைவழங்கும்.
மாநில வாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை வருமாறு:-
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 932 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 5 நகரங்களில் இவை கட்டபடும்.
ஆந்திர மாநிலத்தில் 37 நகரங்களில் ஒருலட்சத்து 93 ஆயிரத்து 147 வீடுகள் கட்டப்படும். குஜராத்தில் 4 நகரங்களில் 15 ஆயிரத்து 580 வீடுகள் கட்டப்படும்.
தெலுங்கானாவில் 10 நகரங்களில் 10 ஆயிரத்து 290 வீடுகள் கட்டப்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் 10 நகரங்களில் 6 ஆயிரத்து 255 வீடுகள் கட்டப்படும்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.