உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது; அதற்கு எல்லை இல்லை. பயங்கர வாதிகள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன் படுத்தி, மக்களை இழுக்கின்றனர். ஆனால், பயங்கர வாதத்திற்கு, அனைத்து மதத்தினரும் பலியாகின்றனர். அதனால், பயங்கர வாதத்தில் இருந்து, மதத்தை தனியே பிரிக்கவேண்டும். இரண்டுக்கும் இடையே, ஒரே ஒருவித்தியாசம் தான் உள்ளது. ஒருதரப்பிற்கு, மனித நேயத்தின் மீது நம்பிக்கை உள்ளது. மற்றொரு தரப்பிற்கு, அதில் நம்பிக்கை இல்லை; அவ்வளவுதான்.
நாம், சமூகத்துடன், குறிப்பாக, இளைய சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எந்தநாடும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்க கூடாது; பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரக்கூடாது; நிதி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்க கூடாது. இதை, வலியுறுத்தி, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, போராட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆள்பிடிக்கும் தளமாக, இணையத்தை பயன் படுத்த அனுமதிக்க கூடாது.
நம் முன் உள்ள மிகப்பெரிய சவாலை, உலக நாடுகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். நம்மால், புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் பரஸ்பர ஒத்துழைப்பை பலப் படுத்த முடியும். பயங்கரவாதத்தை ஒழிக்க, ராணுவத்தையும், சர்வதேச சட்ட நடை முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவின் வலிமை, அதன் பன்முகத் தன்மையில் அடங்கியுள்ளது. இந்தியாவில் தொழில்கள் பெருகவும், அனைவருக்கும் வீடு, கழிப் பறை வசதி, குடிநீர், ஆரோக்கிய பராமரிப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படைவசதிகள் கிடைக்கவும், மத்திய அரசு பாடுபட்டுவருகிறது. இந்தியாவின் வளர்ச்சிவேகம், தற்போது அதிகரித்துள்ளது. சர்வதேச மந்தநிலையிலும், இந்திய பொருளாதாரம், 7.5 சதவீத வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது. இது, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.
மூன்று நாள்பயணமாக மலேஷியா சென்ற பிரதமர் , இரண்டாவது நாளான நேற்று, கோலாலம்பூரில், இந்திய வம்சா வளியினரின் கூட்டத்தில் உரையாற்றியது
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.