ஆசியான் உறுப்புநாடுகள் அனைத்துக்கும் மின்னணு விசாமுறையை இந்தியா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ஆசியான் அமைப்பில் உள்ள 10 உறுப்புநாடுகளும் பயங்கரவாதத்தை அழிக்கும் சிறப்புத் திட்டங்களில் பங்கேற்க வேண்டும். முக்கியமாக கடல் எல்லை பாதுகாப்பு, கடத்தல்களை தடுப்பது உள்ளிட்டவற்றில் கூடுதல் ஒத்துழைப்பு தேவை.
தென் சீனக்கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. சர்வதேச விதிகளுக்கும், ஐ.நா.வின் வழிகாட்டுதல்களுக்கும் உள்பட்டு இப்பிரச்னை அமைதியாக தீர்க்கப்பட வேண்டும்.
ஆசியான் உறுப்புநாடுகள் அனைத்துக்கும் மின்னணு விசாமுறையை இந்தியா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆசியான் நாடுகளுடன் பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம், புதிய கண்டு பிடிப்புகள் என பல்வேறு துறைகளில் இந்தியா தொடர்பில் உள்ளது.
ஆசியான்-இந்திய அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டு நிதியை ஒருமில்லியன் (சுமார் ரூ.6 கோடியே 60 லட்சம்) அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்து 5 மில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.33 கோடி) உயர்த்த இருக்கிறோம். இதன் மூலம் புதிய கண்டு பிடிப்புகள் ஊக்குவிக்கப்படும்.
ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெடுங்கால கலாசாரத்தொடர்பு உண்டு. இதனை விளக்கும் வகையில் தில்லியில் வரும் ஜூலை மாதம் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. ஆசியான் கல்வி மையத்தை மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் திறக்கஉள்ளோம் என்று கூறினார்.
ஆசியான் அமைப்பில் கம்போடியா, இந்தோனேசியா, புருனே, லாவோஸ், மியான்மர், மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், வியத்நாம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஆசியான் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.