சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை மற்றும் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறவேண்டும் என பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடை பெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு இது வரை இல்லாத வகையில் அம்பேத்கருக்கு அதிகபட்ச மரியாதையை வழங்கிவருகிறது. அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம்தேதி அரசியலமைப்பு சட்டதினம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பேத்கரின் நினைவு நாளில், அவரை கவுரவிக்கும் வகையில் அவரது உருவபடம் பொறித்த சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. அம்பேத்கரின் 125-வது பிறந்ததினம் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலித்மக்களின் பிரதிநிதியாகவும் அரசியல் சட்டத்தை வகுத்தவராகவும் மட்டுமே அம்பேத்கர் இதுவரை முன்னிலைப்படுத்தப்பட்டு வந்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி அவர் பல்வேறு பணிகளை செய்துள்ளார். ஆனால் அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. குறிப்பாக, பொருளாதாரம் தொடர்பான அம்பேத்கரின் பார்வையும் எண்ணமும் இன்னமும் முழுமையாக புரிந்துகொள்ளப்பட வில்லை. எனவே, அவரது கொள்கைகள் அனைத்தையும் நாட்டுமக்களிடம் நீங்கள் எடுத்துக் கூறவேண்டும்.
மேலும் முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் (டிசம்பர் 25) மற்றும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாட்கள் வருகின்றன. எனவே, அவர்களது கொள்கைகளையும் பரப்ப நீங்கள் கூடுதலாக உழைக்க வேண்டும். என்று அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு பேசும்போது, “நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.