மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தை நிவாரணமையமாக வைத்து, நிவாரணப்பொருள்களை சேகரித்து உதவி செய்துவருகிறோம். கடலூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி மக்களுக்கு ஆறுதல்தெரிவிக்க வந்துள்ளேன். சென்னை நகரம் வெள்ளநீர் வடிந்து குப்பை குவியலாக உள்ளது. எனவே வியாழக் கிழமை முதல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாஜக சார்பில் சென்னை நகரை சுத்தம்செய்யும் பணியில் ஈடுபடவுள்ளோம்.
சென்னையில் நான் படகில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிவாரணஉதவிகள் வழங்கியுள்ளேன். பல்வேறு தன்னார்வ தொண்டர்களும், தொண்டுநிறுவனங்களும் உதவிகள் புரிந்துவருகின்றன. தமிழகம் முழுவதும் மருத்துவ உதவி தேவைப் படுகிறது. பாஜக சார்பில் மருத்துவ உதவி செய்துவருகிறோம். தொற்று நோய் பரவாமல் இருக்க மத்திய அரசு சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழகத்தில் மழை, வெள்ளபாதிப்பை அறிந்தவுடன் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு 940 கோடி நிதியை உடனே வழங்கினார். பின்னர் சென்னையை நேரில்வந்து பார்வையிட்டு மேலும் ரூ.1000 கோடி வழங்கியுள்ளார். அதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக அரசு சிலநிவாரணங்களை அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் போதாது. எனவே முதல்வர் மறுபரிசீலனை செய்யவேண்டும். கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். மேலும் இனிமேல் பேரழிவை சந்திக்காத வகையில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மறுசீரமைப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.