காங்கிரஸ் கட்சியை பேச்சு வார்த்தை மூலம் சமாளித்து மசோதாக்களை நிறை வோற்றுவோம்

காங்கிரஸ் கட்சியை பேச்சு வார்த்தை மூலம் சமாளித்து, சிக்கலில் இருக்கும் சரக்கு சேவை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்களை நிறை வோற்றுவோம் என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவைவரி மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா ஆகியவற்றை நிறை வேற்றும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக., முயன்று வருகிறது. மக்களவையில் பெரும் பான்மை இருந்தும்  மாநிலங் களவையில் பெரும்பான்மை இல்லாததால் இந்தமசோதாக்கள் தற்போதும் நிறைவேற்றப் படாமல் இலுவையில் உள்ளது.

குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா விவகாரத்தில் ஆளும் பாஜக., காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களை சந்தித்து பேசிவருகிறது.

இந்நிலையில் பேச்சு வார்த்தை மூலம் காங்கிரஸ் கட்சியின் தடைகளை சமாளிக்கமுடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

”காங்கிரஸ் கட்சி எழுப்பிவரும் 3 முக்கிய மசோதாக்களின் பிரச்சனையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களை இணைங்க வைக்கமுடியும். அவர்கள் முன் வைக்கக்கூடிய சில கேள்விகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் பதிலளிக்க முடியும். அவர்கள் பிரச்சனைக் குள்ளாக்கும் மசோதாக்களை அனைத்து முன்னாள் நிதி மந்திரிகள் ப.சிதம்பரம் மற்றும் பிரணாப்முகர்ஜி ஆகியோரால் கொண்டு வரப்பட்டதுதான்.” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...