ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தையின் பசியை போக்கிய சுரேஷ் பிரபு

சமூக வலைதளமான, 'டுவிட்டர்' மூலம் கிடைத்த தகவலால் ஓடும் ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டு பசியை போக்கினார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. உத்தரப்பிரதேச மாநிலம் மந்துவாடி ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு அதிவேக விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் குசும் யாதவ் என்ற பெண் தன் ஐந்து வயது மகன் அவிஸ் உடன் வாரணாசியில் உள்ள மந்துயாதிஹ் ரயில் நிலையத்தில் ஏறினார்.

வட இந்தியாவில் கடும் மூடு பனியின் காரணமாக, ரயில் மிகவும் மெதுவாகச் சென்றதால், ரயிலில் உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், பசியால் அழுத தன் மகனுக்கு, பால் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல், குசும் தவித்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத குசும் யாதவ் தனது கணவரான சத்யேந்த்ரா யாதவுக்கு போன் செய்து தகவலை கூறினார். சத்யேந்த்ரா டெல்லியில் இருந்ததால் தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தார். அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது.

சமூக வலைதளமான டுவிட்டரின் மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் அக்கவுண்ட்டை கண்டுபிடித்தார். அதில் தனது மகன் பசியால் துடித்துக்கொண்டிருக்கிறான். தாங்கள் உடனே உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மெசெஜ் வந்து சேர்ந்ததும் சுரேஷ் பிரபு துரித நடவடிக்கை மேற்கொண்டார். அவர் ரெயில்வே துறையை தொடர்பு கொண்டு அந்த ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து அந்த சிறுவனுக்கு உடனே பால் மற்றும் பிஸ்கட் வழங்கி உதவிட உத்தரவிட்டார்.

உடனே அலகாபாத் டிவிஷனல் ரயில் மானேஜர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதன்படி அந்த ரயில் படேஹ்பூர் ரயில் நிலையம் வந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் அவர்கள் இருவருக்கும் உணவு வழங்கினார். மேலும், அந்த ரயில் கான்பூரை வந்தடைந்தபோது ரயில்வே அதிகாரிகள் காத்திருந்து பால் மற்றும் பிஸ்கட் வழங்கினார்கள். பசியாக இருந்த தனது மகனுக்கு உடனடியாக உணவு வழங்கிய அதிகாரிகளுக்கும், அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும் அவிஸின் அம்மா குசும் நன்றி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...