குஜராத் என்க வுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இஷ்ரத்ஜகான், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதிதான் என்று மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்ற வாளிகளில் ஒருவரான டேவிஹெட்லி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006ஆம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் குஜராத்போலீசாரால் அகமதாபாத் புறநகரில் சுட்டுக் கொல்லப் பட்டார். குஜராத் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால் இது போலி என் கவுண்ட்டர் என்று போலி மதச் சார்பின்மையினரும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த என் கவுண்ட்டர் வழக்கில்தான் தற்போதைய பா.ஜ.க. தலைவர அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டிருந்தார்.
அதேபோல் காவல் துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் பலரும் இந்தவழக்கில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா சிறையில் உள்ள மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்ற வாளிகளில் ஒருவரான ஹெட்லியிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணைநடத்தி இருந்தனர். அந்த விசாரணையின் போது இஷ்ரத் ஜகான், லஷ்கர் இதொயா இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி என ஹெட்லி உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஹெட்லி அண்மையில் மும்பை நீதி மன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி அப்ரூவரானார். அவருக்கு நீதிமன்றம் மன்னிப்புவழங்கி சாட்சியமாக்கி உள்ளது. இனி ஹெட்லியிடம் நடத்தபடும் விசாரணையில் இஷ்ரத்ஜகான் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.