10 லட்சத் துக்கும் மேல் வருமானம் உடையவர்களுக்கு மானியவிலை சமையல் எரி வாயு மானியம் ரத்து

ஆண்டுக்கு ரூ. 10 லட்சத் துக்கும் அதிகமாக வருமானம் உடைய வர்களுக்கு மானியவிலையில் சமையல் எரி வாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்துசெய்யப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரி வாயு உருளைகள் மானியவிலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தைவிலை ரூ.608 ஆகும்.

நாட்டில் தற்போது 16.35 கோடி எரி வாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். எரி வாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிகணக்குக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது, 14.78 கோடி பேருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமையல் எரி வாயுக்கு வழங்கும் மானியத்தால் ஏற்படும் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், வசதிபடைத்தவர்கள் தங்களது மானியத்தை தாங்களே முன் வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், சந்தை விலையில் வாங்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதையேற்று, 57.5 லட்சம்பேர் சமையல் எரி வாயு உருளைக்கான மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் அதிகவருமானம் உடையோர் சந்தை விலையில் சமையல் எரி வாயு வாங்கலாம் என அரசு கருதுகிறது.

இதன்படி கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வருமானவரி செலுத்தியவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் எரி வாயு மானியம் வழங்கப்பட மாட்டாது. குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வரி செலுத்தி யிருந்தாலும் மானியம் ரத்துசெய்யப்படும்.

எனவே, அதிகவருமானம் பெறும் சமையல் எரி வாயு வாடிக்கையாளர்கள் ஜனவரி மாதம், புதிய எரி வாயு உருளைக்கு விண்ணப்பிக்கும் போது, தாங்களாகவே தங்களது வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்து, மானியத்தை விட்டுகொடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...