இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும் போது, ''ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கதேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்.
நவீன நகரங்கள் திட்டத்துக்கான விவரங்களை கடந்த டிசம்பர் 15-க்குள் மத்தியஅரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதுகுறித்து எந்த விவரத்தையும் அனுப் பவில்லை. தமிழகத்துக்கு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவேண்டும்.
தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஜனநாயகத்தின் அங்கமாகும். ஏனெனில் செய்தியா ளர்களின் வழியாகவே மக்களுக்கு செய்தி சென்றுசேர்கிறது. விஜயகாந்தின் நல்ல செயல்கள் பாராட்டும் அதே நேரத்தில் சிலதவறுகளை சுட்டிக்காட்டவும் பாஜக தயங்கியதில்லை'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.