ஒளியூடகங்களை பின்னுக்குத்தள்ளி அச்சு ஊடகங்கள் எழுச்சியடையும்

தொலைக்காட்சி உள்ளிட்ட காட்சி ஊடகங்கள் தேவையற்ற விவாதநிகழ்ச்சிகளின் மூலம் செய்திகளின் கோணத்தில் இருந்து மக்களை திசை திருப்பி வருகிறது , இனி வரும் நாட்களில் ஒளியூடகங்களை பின்னுக்குத்தள்ளி அச்சு ஊடகங்கள் எழுச்சியடையும்

செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகள் சமீப காலமாக மழுங்கடிக்கப்பட்டு வருகிறது , ஒருசெய்தியின் பின்னணியில் உள்ள உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள மக்கள் சிரமப்படும் நிலையில், இதுபோன்ற கோணல்கள் ஏதுமின்றி அச்சு ஊடகங்களால் மட்டுமே உண்மை செய்திகளை வழங்கமுடியும்

செய்திகள் புனித மானவை என்ற பழைய தொழில் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும். செய்திசார்ந்த தனிப்பட்ட கருத்துகள் ஏதுமிருந்தால் அவை அந்த பத்திரிகை களின் தலையங்கம் பகுதியில் தனியாக இடம் பெறலாம் , தற்காலத்தில், ஒருசெய்தியின் பின்னணியில் ஒரேபாணியில் டி.வி. சேனல்களில் விவாதங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இவை பெரியளவில் வெளிச்சம்போட்டு காட்டப்படுகின்றது.

இதுபோன்ற விவாதங்களுக்கு பிறகு உண்மையான செய்தி என்ன? என்பதை அறிந்து கொள்ள தேடவேண்டிய நிலைக்கு பார்வையாளர்கள் தள்ளப் படுகின்றனர். எனவே, எவ்வித இடைச் சொருகலும் இல்லாமல் தெளிவான செய்தியை வழங்கும்வாய்ப்பு அச்சு ஊடகங்களான பத்திரிகைகளுக்கு கிடைக்கின்றது. இந்த வாய்ப்பை பயன் படுத்தி காட்சி ஊடகங்ளுக்கு போட்டியாக அச்சு ஊடகங்கள் நிமிர்ந்தெழுந்து நிற்கவேண்டும்.

உலகம் முழுவதும் அச்சு ஊடகங்கள் கடும்நெருக்கடியை சந்தித்து வந்தாலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகின்றது, இந்தவளர்ச்சி ஜனநாயகத்துக்கு மிகவும் நல்லது , புதிய பிராந்திய மொழி பத்திரிகைகளில்  இந்தியாவில் நாளிதழ்களின் வளர்ச்சி எட்டுசதவீதம் அதிகரித்துள்ளது.

நன்றி அருண் ஜெட்லி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...