ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், ‘‘திறன் அறியும்சோதனை, உடல் தகுதிசோதனை ஆகியவை நேர்முக தேர்வில் இருந்து மாறுபட்டவை. அவை தொடரும். எனினும் இந்தசோதனைகள், தகுதி அடிப்படையில் இருக்கும். இத்தகைய சோதனைகள் மதிப் பெண்கள் அடிப்படையில் இருக்காது’’ என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இனி வரும் ஆட்சேர்ப்பு பணியின் ஒருபகுதியான நியமன விளம்பரங்கள் அனைத்தும் நேர்முகதேர்வு இல்லாமல் இருக்கும். அதேசமையத்தில் சில குறிப்பிட்ட பணிஇடங்களுக்கு நியமனத்தின் ஒரு அங்கமாக நேர்முகதேர்வு தேவை என்று அமைச்சகமோ, துறையோ கருதினால், நேர்முகதேர்வு இல்லை என்ற நடைமுறையில் இருந்து விலக்குகேட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதலுடன் மத்திய பணியாளர், பயிற்சிதுறைக்கு விரிவாக எழுதவேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்த பதிலை விளக்கஅறிக்கையாக அனைத்து அமைச்சகங்களும் 7–ந்தேதிக்குள் அளிக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திரமோடி இந்த தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.