மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு விமானம்மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நான் தனிப் பட்ட 5 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், கம்போடியா, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவருகிறேன். நான் வெளிநாட்டில் இருந்ததால் ஜல்லிக்கட்டு நிலவரம் பற்றி எனக்குதெரியாது. செய்திகளை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.
2016–ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் சிறப்பாக அமையும். முந்தைய காங்கிரஸ் அரசுதான் நிலம் கையகப்படுத்தும் திட்டம், ஜி.எஸ்.டி. மசோதா போன்றவற்றை கொண்டு வந்தது.
ஆனால் இப்பொழுது காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்காக அந்த மசோதா க்களை நிறைவேற்றவிடாமல் டெல்லி மேல்சபையில் தடுத்து வருகிறது.
இந்தசட்டங்கள் நிறைவேறினால் நாட்டின் பொருளாதாரம் 1.5 சதவீதம் வளர்ச்சி அடையும். இந்த ஆண்டாவது காங்கிரஸ் நாட்டின்மீதும் மக்கள் மீதும் அக்கறை இருந்தால் இந்த மசோதா க்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தரவேண்டும்.
தமிழகத்தில் மழைவெள்ளம் பாதிப்பு விவகாரத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை. என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மழைவெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு உடனடியாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கினார்.
அதேபோல மத்திய மந்திரி அருண்ஜெட்லி, நான் உள்பட பலமந்திரிகள் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஜெயலலிதாவை நேரில்சந்தித்தும் பேசி இருக்கிறோம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ப தற்காக மத்திய அரசு ராணுவம், கப்பல்படை, கடலோர காவல் படை ஆகியவற்றை அனுப்பி முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட செய்தது.
அதுபோல நிவாரண நிதியை ஒட்டுமொத்தமாக கொடுக்கமுடியாது. பகுதி பகுதியாகத் தான் தர முடியும். மேலும் வெள்ளத்தால் வீடுகள் இழந்தவர்களுக்கு மாநில அரசுகளுடன் இணைந்து மத்தியஅரசு அதற்கான நடவடிக்கையை எடுத்துவருகிறது.
மீண்டும் இந்தமாதிரியான பெரும் பாதிப்புகளை தடுப்பதற்கு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி, நகராட்சி குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்றுவீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கும் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்துசெயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.