உத்தர பிரதேசத்தில் வருகிற 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் பரேலி நகரில் நேற்றிரவு நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்வி, வருகிற 2017 சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிட்டு ஆட்சி மைக்கும் என கூறியுள்ளார்.
நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடர்புடைய டெல்லி மாவட்ட கிரிக்கெட்சங்க சர்ச்சை குறித்து பேசிய நக்வி, மூத்த பாஜக தலைவர் தூய்மையானவர் மற்றும் நேர்மையானவர் என்று கூறியதுடன், ஆம் ஆத்மி கட்சி நாடகம் ஆடுகிறது என குறை கூறியுள்ளார்.
‘நாட்டின் முன்னேற்றத்தை காங்கிரஸ் தடுக்கிறது. காங்கிரஸ் கட்சி, பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்திய முறையிலான மன நிலையை கொண்டுள்ளது. அக்கட்சி ஊழலின் தாய்’ என்றும் அவர் விமர்சித்தார்.
காங்கிரசின் துணை தலைவர் ராகுல்காந்தி புது வருடத்தையொட்டி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து பேசிய நக்வி, ‘யாரும் புது வருடத்தை உலகின் எந்த பகுதியிலும் கொண்டாடலாம். வெளிநாட்டு பயணம் அவருக்கு ஒருவேளை நல்லஅறிவை தரக்கூடும்’ என்று கூறினார்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.