பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவதளபதி உள்ளதாகவும், நரேந்திர மோடிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும் இடையேயான நட்பால் கோபமுற்றே அவர் தீவிர வாதிகளை தூண்டி விட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ரஷ்யா ,ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார்.
மோடியின் இந்த திடீர்பயணத்திற்கு இந்திய அளவில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தபோதிலும், பல்வேறு உலகநாடுகள் இதனை வரவேற்றன. எனினும் பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்த மட்டில், அது இந்தியாவுடன் நட்புபாராட்டுவதை விரும்பு வதில்லை. அதை மீறி பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்திய அரசுடன் நெருக்கம்காட்ட ஆரம்பித்தால், அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக எல்லைப் பகுதிகளில் அத்து மீறலில் ஈடுபட்டு இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த ஆத்திர மூட்டும் நடவடிக்கையால் இருநாடுகள் இடையே கசப்புணர்வுகள் தலை தூக்கிவிடும்.
அப்படி இல்லாவிட்டால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளே இந்தியா – பாகிஸ்தான் உறவை சீர் குலைக்கும் விதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடுவார்கள். இதன் பின்னணியிலும் பெரும் பாலும் பாகிஸ்தான் ராணுவம் இருக்கும்.
அப்படியான ஒரு தாக்குதல் தான் தற்போது பதன்கோட்டில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய மோடி – நவாஸ் சந்திப்பை பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல்ஷெரீப் மிகுந்த கசப்புணர்வுடன் பார்த்ததாகவும், அந்தவெறுப்பின் விளைவே பதன்கோட் தாக்குதல் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.