பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம், இந்தியா வழங்கி யுள்ளது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே வெளியுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட ஆதாரத்தில், பதன் கோட் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் குறித்தும், அவர்கள், பாகிஸ்தானில் உள்ள வர்களுடன் பேசிய உரை யாடல்களை உளவுத் துறையினர் பதிவு செய்த ஆதாரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா ஆதாரங்கள் வழங்கியுள்ளதை பாகிஸ்தான் அரசும் உறுதிசெய்துள்ளது.
மேலும் பதன்கோட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, இந்த தாக்குதல்தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்பில் உள்ளதாகவும், இந்தியா வழங்கிய தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிகூறியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்கள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவது என மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பதன்கோட் தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைளை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் பழிக்குபழி வாங்குவோம் என சூளுரைத்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அமைதியாக இருக்காது என்றும், அந்நாட்டுக்கு இந்தியாவின் சார்பில் உரியபதிலடி கொடுக்கப்படும் எனவும் நிதின் கட்காரி எச்சரித்துதுள்ளார்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.