மாற்றுத் திறனாளிகளை கடவுளால் சிறப்பிக்கப் பட்டவர்களாக நாம் காண வேண்டும்

நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட மற்றும் பின் தங்கிய மக்களுக்காகவே இந்த அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் இந்தமக்களின் வளர்ச்சியில் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக பல்வேறு உறுதியான நடவடிக் கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சிலநேரங்களில் ஒட்டுமொத்த உலகமும் என் பின்னால் இருப்பதுபோல உணர்கிறேன். ஆனால்  பல்வேறு வழிகளில் இருந்து தாக்குதலை அனுபவித்து வருகிறேன். எனது பாதையில் இருந்து என்னை விலக்கி, சர்ச்சைகளில் சிக்கவைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

ஏழைகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்பதே எனது தாரக மந்திரம். ஆகையால் தான் நான் எதைக்கண்டும் கலக்கமடையாமல் இருக்கிறேன்.

 அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படுவதாலும், தரகுமுறை அகற்றப்படுவதாலும் தான் இவை அனைத்தும் நடக்கின்றன. தரகுமுறை ஒழிக்கப்படுவதால் சிலர் கவலையடைந்துள்ளனர். ஆதலால்தான் இந்த பிரச்னைகள் எழுகின்றன. அத்தகைய நபர்கள் அச்சப் படுகின்றனர். ஆனால் நான் அச்சப்படவில்லை.  நான் வேதனைப்படும் பட்சத்தில், அந்தவேதனை விவசாயிகளின் நிலைகள், அவர்களது பிரச்னைகளாகத் தான் இருக்கும். ஏனெனில், அது தரகரின் பிரச்னை அல்ல.

 மாற்றுத் திறனாளிகளின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். அவர்களை "விக்லாங்' (குறைபாடு உடையவர்கள்) என்று அழைப்பதை தவிர்த்து "திவ்யாங்' (சிறப்புத் திறன் படைத்தோர்) என்று அழைக்க வேண்டும். அத்தகைய நபர்களை கடவுளால் சிறப்புசக்திகள் வழங்கப்பட்ட நபர்களாக நாம் காண வேண்டும்.

 அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் செய்துகொடுக்கும் வகையிலும், அவர்களின் இணக்கமான வாழ்க்கைக்கு உதவும் வகையிலும், "சுகம்ய பாரத் அபியான்' என்ற திட்டம் தொடங்கப்படும். ஒவ்வோர் அரசு அலுவலக கட்டடங்களிலும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்து வதற்கான சாய்தளப் பாதையும், அவர்கள் பயன் படுத்தக் கூடிய வகையில் கழிப்பிட இருக்கையும் ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும்வகையில், அமைப்பு முறையிலும், விதிகளிலும் மத்திய அரசால் மாற்றம் கொண்டுவரப்படும்.

இந்த நிகழ்வுக்காக அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் விபத்தில் சிக்கியதைகேட்டு வருத்தமடைந்தேன். அவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதுடன், அவர்களுக்கு சிறந்த மருத்துவவசதிகள் கிடைப்பதையும் அரசு உறுதி செய்யும்.

 மாற்றுத் திறனாளிகளை பராமரிக்க வேண்டியது, அவர்களது பெற்றோரின் கடமை மட்டுமே அல்ல. அவர்களை கவனித்து கொள்வதில் சமூகத்துக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. எனவேதான், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மீது மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. வாராணசிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே வந்தது மகிழ்ச்சி யளிக்கிறது. அப்போது கங்கை ஆரத்தியின் போது அவர் பேசிய வார்த்தைகள், வாராணசியை சேர்ந்த ஒவ்வொருவரையும், இந்தியர் அனைவரையும் பெருமைப்படுத்தி யுள்ளது .

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த மக்களவைத் தொகுதியான வாராணசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வழங்கி பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...