டெக்ஸ்டைல் தலை நகர் மற்றும் தமிழகத்தின் தொழில் நகரமான கோவைக்கு வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தகல்லூரி தமிழக அரசிடம் ஒப்படைக்கப் படுகிறது. இது சிறப்பாக நடைபெறும் என நம்புகிறேன் . தொழிலாளர்களின் நலனை பேணிகாப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது .
காந்திய கொள்கையில் இந்த மருத்துவமனை இயங்குகிறது . இந்த மருத்து வமனை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும் , தமிழகத்தில் இ.எஸ்.ஐ திட்டத்தின் மூலம் 28 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். தொழிலாளர்களின் பணித்திறனை மேம்படுத்துவதில் இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழிலாளர் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரே சமளவில் சிகிச்சை அளிக்கப்படும்.
1952-ம் ஆண்டு கான்பூர் மற்றும் டெல்லியில் 2 மையங்களுடன் தொடங்கிய இ.எஸ்.ஐ. இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து 830 மையங்களாக வலுவடைந்துள்ளது.
தமிழகத்தில் 10 இஎஸ்ஐ மருத்துவமனை செயல் படுகிறது . நெல்லை இஎஸ்ஐ மருத்துவமனை படுக்கைகளை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் . கோவை இ.எஸ்.ஐ மருத்துவ கல்லுாரியில் உள்ள 100 மருத்துவ இடங்களில் 20 இடம் இஎஸ்ஐ பயனாளிகளின் குழந்தைகளுக்கு ஒதுக்கபடும். நெல்லை, மதுரை, கோவை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்டஇடங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கையை 345 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளோம்.
தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த இஎஸ்ஐ மருத்துவமனை மேலும் மேம்படுத்தப்படும். மேலும் பல்வேறு பலதிட்டங்களை , சட்டங்களை வகுக்க முடிவுசெய்துள்ளோம்.
ரூ. 580 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசியது.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.