வணக்கம். இங்கு கடல் போல் திரண்டிருக்கும் கூட்டத்தினரை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . கோவை, திருப்பூர், ஈரோடு, போன்ற நகரங்களுக்கு நான் பலமுறை வந்துள்ளேன். குஜராத் முதல்வராக இருக்கும் போது பலமுறை வந்துள்ளேன் . தமிழக மக்கள் காட்டும் அன்பிற்கும், பாசத்திற்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பிரதமரான பின்னர் நான் கோவையில் பொதுகூட்ட மேடையில் பேசுவது இதுவே முதல் முறை.
கோவை மண்ணில் இருந்து நான் நாட்டுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், கடந்த காலங்களில் ஊழல்கள் தொடர்ந்தன. இளைஞர்கள் பலர் நிற்கதியாக நின்றனர். கடந்த காலத்தை நினைத்து பாருங்கள் .
எங்களின் ஆட்சி வந்தபின்னர் இந்த ஒன்றரை ஆண்டில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. தொழிலாளர், கிராமத்தினர் , நகர மக்கள் என அனைத்து தரப்பினரும் நல்ல எதிர்பார்ப்பை நோக்கியுள்ளனர் .
சிலபேருக்கு வலிக்கிறது, கவலை தருகிறது . எப்படிடா டீ விற்றவன் பிரதமராகி விட்டானே என்று. ஆகையால் தான் எனது அரசின் செயல்பாடுகள் அவர்களுக்கு கவலை தருகிறது. ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், வஞ்சிக்கப் பட்டவர்களை வைத்து அரசியல் நடத்தியவர்களால் ஏழைதாயின் மகனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ஊழல் இல்லை. இதனால் இந்தமோடியை என்னடா பண்ணுவது என்று சிந்திக்கின்றனர் . மோடி அரசை செயல்படுத்த முடியாமல் முடக்கி வருகின்றனர். இதனால் ராஜ்ய சபாவில் குழப்பம் விளைவிக்கின்றனர்.
ஏழை எளிய மக்களுக்கு எதிரான சட்டங்களை மக்களவையிலே நீக்கியிரு க்கிறோம். 1800 சட்டங்களில் 700 சட்டங்களை நீக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்புதெரிவித்தது.
பழங்கால சட்டங்களை தூக்கி எறியவேண்டும் என நான் முடிவு எடுத்தால் அதற்கு இடையூறு செய்கின்றனர் .தொழிலாளர், ஏழைகளுக்கு இடையூறு செய்யும் சட்டங்களை நீக்க நினைத்தால் இதற்கும் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் அவர்கள் பொய்யை உரக்கசொல்லி வருகின்றனர் .
விவசாயிகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு ஆதரவான பல மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. நான் பிரதமராக பதவியேற்றதும் பல்வேறு மாநில முதல்வர்கள் எனக்கு கடிதம் எழுதினர். மாநிலத்தில் யூரியா தட்டுபாடு நிலவுவதாக இருக்கிறது என குறிப்பிட்டனர்.
ஆனால் 2015க்குப் பிறகு அப்படி ஒருநிலை எங்கும் இல்லை. நாம் தேவையான அளவில் யூரியாவை உற்பத்தி செய்து காட்டியுள்ளோம். யூரியா கள்ளச்சந்தையில் விற்பது தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எங்காவது நிலுவைத்தொகை இருப்பதாக புகார் வந்துள்ளாதா.. 60 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கிடைக்காத பல நல்ல திட்டங்கள் இந்த 15 மாதத்தில் கிடைத்துள்ளது. இதனால் ரொம்பபேருக்கு தூக்கம் போச்சு.
அதேபோல கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எங்காவது நிலுவைத்தொகை இருப்பதாக புகார் வந்துள்ளாதா.. 60 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கிடைக்காத பல நல்ல திட்டங்கள் இந்த 15 மாதத்தில் கிடைத்துள்ளது. இதனால் ரொம்பபேருக்கு தூக்கம் போச்சு.
இமாலய ஊழல்களின் மூலம் இளைஞர்கள் நம்பிக்கையை இழந்திருந்த நிலையில், பா.ஜ. ஆட்சியின் மூலம், மக்களுக்கு ஒருபுது உத்வேகம் பிறந்துள்ளது. இந்த ஒன்றரை ஆண்டு கால பா.ஜ. ஆட்சியில், எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இதை எதிர்க் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே, அவர்கள் தங்களது கோபத்தை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் காட்டி வருகின்றனர் .
இந்த நாட்டில் உள்ள மக்களில் 65 சதசவீத்த திற்கும் மேற்பட்ட மக்கள் 35 வயதுடையோர். எனவே இந்நாடு இளைமையான நாடு. இளைஞர்களே மேக்இன் இந்தியா திட்டம் ஏன் நாம் கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் இளைஞர்களூக்கு வேலைவாயுப்பு அதிகரித்துள்ளது. உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த ஓராண்டில் அந்நிய நாட்டின் நேரடிமுதலீடு பெருமளவு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசும்போது பொதுத்துறை தனியார் துறையை மட்டுமே கவனிக்கிறது.
நான் இந்த இரண்டையும் தவிர்த்து மூன்றாவதாக பார்ப்பது தனிமனித வளர்ச்சி. தனிமனிதனின் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றால் தான் நாடு முழுமையான வளர்ந்த நாட்டாக இருக்கும் ஆகவேதான் நம் அரசு முத்ரா யோஜனா திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். சிறுதொழில் செய்வோருக்கு நிதி அளிக்க வேண்டும் என கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 2 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.
அதுபோல அரசு பணியில் சேர லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு மிகப்பெரிய ஒரு முடிவை இந்த அரசு இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
நாடுமுன்னேற வேண்டுமானால் அமைதியும், நிம்மதியும் இருக்கவேண்டும். உலகில் உள்ள பல்வேறு நிதி அமைப்புகளின் ஒத்தகருத்து எது தெரியுமா? உலகில் வேகமாக வளரும் நாடு இந்தியா என்பது தான் அக்கருத்து.
பாரதிய ஜனதாகக் கட்சியின் பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியது
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.