தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து நீடிப்பார் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தேசிய அலுவலக செயலாளர் அருண் குமார் ஜெயின் வெளியிட்ட செய்தியில், ‘தமிழக பாஜக.,வின் தற்போதைய தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், அப்பொறுப்பில் தொடர்வார் என தேசியத்தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.
பாஜக விதிகளின்படி கிளைகமிட்டி முதல் அகில இந்திய தலைவர் வரை அனைத்து பதவிகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். 2009, 2012-ல் நடந்த தேர்தல்களில் மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் மத்திய அமைச்சர் ஆனதால் 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் நடந்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டதால் பாஜக உள்கட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது. கிளை, நகர, ஒன்றிய அளவில் தேர்தல்தொடங்கிய நிலையில் கன மழையால் திட்டமிட்டபடி டிசம்பர் இறுதிக்குள் மாநிலத்தலைவர் தேர்தலை நடத்த முடிய வில்லை.இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் தமிழிசை சவுந்தர ராஜன் தொடர்வார் என அமித்ஷா அறிவித்துள்ளார்.
நம்பிக்கைக்கு நன்றி
அடிமட்டதொண்டராக இருந்த எனக்கு, மாநில தலைமை பொறுப்பு கொடுத்ததோடு, மீண்டும் பதவிநீட்டிப்பு செய்துள்ளனர். 2016 சட்ட சபை தேர்தல்பணியை வேகப்படுத்தவும், பாஜக., ஆட்சியை ஏற்படுத்தவும் கூடுதல் உந்துசக்தியை இது அளிக்கிறது. என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, தொடர்ந்து பணியா ற்றுவேன்.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.