”நாங்கள் நம்பிக்கையான பங்காளிகள்”

”நாங்கள் நம்பிக்கையான பங்காளிகள்”-என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் திமுக வோடு மீண்டும் கூட்டணி சேர்ந்த போது, சென்னையில் கூறியுள்ளார்..

WE ARE MOST DEPENDABLE PARTNERS"-என்கிற ஆசாத்தின் வார்த்தையில் எவ்வளவு உண்மையுள்ளது?

2-ஜி அலைகற்ரை வழக்கில் கடந்த வெள்ளிகிழமையன்று, தன் தரப்பு வாதத்தில் முன்வைத்த ஆ.ராசா அவர்கள், தான்செய்த விஷயங்கள் அனைத்தும், முன்னாள், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும், இன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும் தெரியும் எனச்சொல்லி அவர்களை சாட்சிகலாக அழைக்க வலியுறுத்தியுள்ளார்..

காங்கிரசின் மானத்தை “நடுகோர்ட்டுக்கு மட்டுமல்ல நடு ரோட்டுக்கும் “ கொண்டுவந்த திமுக “நம்பகத்தன்மை கொண்ட பங்காளியாம்”

2011 ஆம் ஆண்டு திமுக -காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தைகள் அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்றுக் கொண்டிருந்த சமயம் இதே 2-ஜி மற்றும் ஏர்செல் மேக்சி வழக்கு விஷ்யமாக அதே கட்டடத்திற்குள் இருந்த கலைஞர் டி.வி. சி.பி.ஐ ஆல் சோதனை செய்யப்பட்டது.

‘நம்பிக்கைக்குரிய பங்காளிகள்” எப்படி ந்டந்து கொண்டார்கள் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்..

2004 ஐ.மு.கூ.அரசில் முக்கிய இலாக்கள் வேண்டும் என்பதர்காக, அரசுக்கு தரவேன்டிய ஆதரவு கடிதத்தை கலைஞர் அவர்கள் எப்படி எல்லாம் இழுத்தடித்தார்கல் என்பதை காங்கிரஸ் மறந்திருக்க முடியாது..தன் மருமகன், தயாநிதி மாறன், முதன் முறை எம்.பி.ஆக இருந்தாலும், அவருக்கு “காபினட்” மந்திரி வழங்க வேண்டும், அதுவும் அவர்செய்யும் தொழில் சம்பந்தமான இலாகாவே தரவேண்டும், என்பதர்காக காங்கிரசுக்கு திமுக கொடுத்த”நெருக்குதல்’ எவ்வளவு என்பதை, இன்னும் அந்த “வடு” மறையாமல் இருக்கும், காங்கிரஸ் மறந்திருக்க முடியாது.

இன்னும்,இந்த “நம்பிக்கைக்குறிய பங்காளிகளின்’ சரித்திரத்தை இன்னும் புரட்டிப் பார்த்தால், 1996 இல், காங்கிரசை உடைத்து, தமிழ்மாநில காங்கிரசை ஏர்படுத்தி தன்னோடு சேர்த்துக் கொண்டதை சொல்லலாமா?

அல்லது 1971 இல், ‘” சோலையின் நடுவே குடியிருக்கும் சோஷ்ச்லீச சிற்பி இவர்தான்” என் திருமலை பிள்ளை சாலையில் இருக்கும் காமராஜர் அவர்கலின் வீட்டை காட்டி கேலிப்பிரச்சரம் செய்ததை சொல்லலாமா?..

இல்லை–1976 ஜனவர் 30 அன்றும், 1991 லும், ஜனநாயக மரபுகளை மிறீ திமுக ஆட்சியை ‘டிஸ்மிஸ்” செய்ததை சொல்லலாமா?

இவையெல்லாம் சரித்திரம் — காலம் கடந்தவை– மரந்து போயிருக்கலாம்..ஆனால், வெறும் 2 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 15 2013 ஆம் ஆண்டு திமுக பொதுக்குழுவில், கலைஞர் அவர்கலை பேசியதை பாருங்கள்..

“நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது..காங்கிரசுடன் கூட்டனி வைத்துவிடுவோம் என்று நீங்கள், ஒருபோதும் என்ண வேண்டாம்..

ஊழல் குற்ற சாட்டில் கனிமொழிக்கு கலங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துரோகத்தை ஏற்படுத்தியும், கட்சிக்கு கள்ங்கம் விளைவித்தவர்கள் காங்கிரஸ் காரர்கள்.பூஜ்ஜியங்கலை போட்டு திமுகவை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவைத்து விட்டார்கள்.’

இப்படி பேசிய பிறகும் தன்மானத்தை வென்னீரில் கரைத்துவிட்டு, இவர்கல் சேர்ந்த கூட்டனியின் முதல் வாசகமே..”வென்றால் ஆட்சியில் இடம்பெறுவது முக்கியமல்ல’_-என குலாம் நபி ஆசத் சொல்லியிருப்பது, தமிழ்நாடு காங்கிரஸ் காரர்கலை பொங்கி எழ்ச்செய்திருக்க வேண்டும்..

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முறி அறிக்கை வெளியிட்டுக்க வேண்டும்..ஆனால் அவரோ ஆசாத்தோடு பொட்டிப்பாம்பாக சென்று கலஞர் வீட்டுவாசலில் ஆசாத் முழங்கியதற்கு சாட்சியாக இருந்துவிட்டு வந்திருக்கிறார்.

2014 தேர்தலில் காங்கிரச் தேய்ந்து கட்டெறும்பானது..2015 இல் தமிழக காங்கிரஸ் ஒட்டு மொத்தத்தையும், ஜி.கே.வாசன் டி.எம்.சி யாக பிரித்து சென்று விட்டார்.

கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருந்த காங்கிரசையும் குலாம் நனி ஆசாத் வந்து சென்னை கூவத்தில் கரைத்து சென்று விட்டார்.

அதுவும் 1967 இல் இருந்து தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறைய  காரனமாக இருந்த கலஙர் கைய்யாலேயே கங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது—வருத்தமாகத்தான் உள்ள்து..

 

எஸ்.ஆர்.சேகர்
மாநிலப்பொருள்ளார்–பாஜக

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...