இந்த தேசத்திற்காகவே வாழ்வேன். இந்த தேசத்திற்காக சாவேன்

தெலுங்கானாவில் தனி மாநிலம் கேட்டு போராடி, எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்தார்கள். சுமார் 600 மாணவர்கள் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இறந்துள்ளார்கள். பேருக்காவது ஒரு தடவை எந்த கல்லூரிக்காவது சென்று மாணவர்களை சந்தித்தது உண்டா இந்த ராகுல் காந்தி?

ஆனால் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு இரண்டு தடவை போய் விடிய விடிய துக்கம் விசாரிச்ச ராகுலின் நோக்கம் அரசியல் இல்லாமல் வேறென்ன?

ரோஹித் வெமுலாவையும் பிற மாணவர்களையும் இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த நிர்வாக குழுவின் அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கபட்டவர்கள்.
நாங்கள் கல்லூரி நிர்வாகத்தில் எந்த தலையீடும் செய்ததில்லை…

அந்த மாணவனின் உயிரை காப்பாற்ற ஏன் எந்த டாக்டரையும் கூப்பிடவில்லை? அந்த மாணவன் தூக்கில் தொங்கினதாக சொல்லப்படும் அன்று சாயந்திரத்தில் இருந்து மறுநாள் காலை போலிஸ் வரும் வரை இவர்கள் ஹாஸ்டலில் இருந்து அந்த பையனை தூக்கி கொண்டு எந்த ஹாஸ்பிட்டலுக்கும் ஏன் செல்லவில்லை?

துர்கா பூஜை அன்று நாடு போற்றும் தெய்வம், துர்காதேவியை தரக்குறைவாக விமர்சித்தும், மகிசாசுரனை வாழ்த்தியும் ஜேஎன்யூ மாணவர் கூட்டம் போட்ட கோசங்களை கொல்கத்தா தெருக்களில் வைத்து விவாதிக்க ராகுல் தயாரா?

யாகூப்மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்த சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ் ஒரு இந்து பாசிஸ்ட், அப்சல்குருவை தூக்கிலிட வைத்த ஜனாதிபதியை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

ரோஹித் வெமுலாவின் தற்கொலையை காங்கிரசும், JNU மாணவர்கள் விவகாரத்தை கம்யூனிஸ்டுகளும், தங்களது அரசியல் லாபத்திற்காகவே பயன்படுத்துகின்றன.

என் பெயர் ஸ்மிரிதி இரானி. என் சாதியை யாராவது சொல்ல முடியுமா? சாதியை வைத்து அரசியல் செய்யவேண்டிய அவசியம் எனக்கில்லை. கல்லூரிகள் விவகாரத்தில் நான் என் கடமையைதான் செய்தேன். யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

இந்த தேசத்திற்காகவே வாழ்வேன். இந்த தேசத்திற்காக சாவேன். கங்கைநீரில் என்னுடைய அஸ்தி கரையும் வரை இந்த தேசதத்திற்கான என்னுடைய துடிப்பு அடங்காது. பாரத் மாதா கீ ஜெய்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...