தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பது குறித்து இறுதி செய்வதற்காக, மத்திய மந்திரியும், பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று மாலை சென்னைவந்தார் தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் எவை என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை.
இதுபற்றி முடிவு செய்வதற்காக மத்திய மந்திரியும், தமிழக பாஜக. தேர்தல் பொறுப் பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை வந்தார். பிரகாஷ் ஜவடேகரை இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் சந்தித்துபேசினார். அதனை தொடர்ந்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ. ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும், இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் கூட்டணிகட்சிகள் குறித்து தெரிவிப்பதாகவும் கூறினார். இன்று தேமுதிக. தலைவர் விஜயகாந்தை பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.