தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கு வரி விதிக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பி.எப் மீதான வரி விதிப்பை ரத்து செய்ய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிலாளர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு வரங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுவதோடு, நிறுவனம் சார்பிலும் அதே அளவு தொகை இத்திட்டத்துக்கு செலுத்தப்படும். இந்தநிதிக்கு ஆண்டுதோறும் சுமார் 8 சதவீதம் அளவுக்கு வட்டி வழங்கபடுகிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இந்ததொகை வழங்கப்படும்.
இதன்மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை திரும்பபெறும்போது 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். இந்த வரிவிதிப்பு வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார். இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பல்வேறு கட்சியினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். வரிவிதிப்புக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, இது குறித்து அருண் ஜெட்லி ஆலோசனை நடத்திவந்தார். இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வரிவிதிப்பை மறுபரீசிலனை செய்யுமாறு பிரதமர் மோடி அருண் ஜெட்லியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் கேட்டுக்கொண்டதால் வரிவிதிப்பு திரும்பப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.