திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டி

கேரளாவில் இதுவரை காங்கிரஸ் ,கம்யூனிஸ்டுகளே  மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது மத்தியில் ஆட்சிநடத்தும் பாஜக இதுவரை கேரள சட்ட சபைக்குள் நுழைந்ததே இல்லை.

இதனால் இந்த சட்ட சபை தேர்தலில் கேரளாவில் எப்படியாவது கணிசமான இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்தி மோடியும், பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர். இதற்காக அமித்ஷா அடிக்கடி கேரளாவந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு செல்கிறார்.

அவரது ஆலோசனைப்படி கேரளாவில் உள்ள பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள் பா.ஜனதாவில் சேர்க்கப்பட்டனர். அவர்களை தேர்தலில் களமிற க்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நடிகர்கள் சுரேஷ் கோபி, பீமன் ரகு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரையும் தேர்தலில்நிறுத்தி வெற்றி பெற முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சுரேஷ் கோபி தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தார். ஸ்ரீசாந்த் பாரதீய ஜனதா நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றார். இதைத் தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவில் இணைந்தார். முதற்கட்டமாக கேரளாவில் போட்டியிடும் 51 தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதில் திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் நடிகர் பீமன் ரகு, பத்தனாபுரம் தொகுதியிலும், சினிமா டைரக்டர் அலி அக்பர் கொடுவள்ளி தொகுதியிலும், டைரக்டர் ராஜசேனன் நெடுமங்காடு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் நடிகர் சுரேஷ்கோபியை திருவனந்தபுரம் தொகுதியிலும், ஸ்ரீ சாந்த்தை திருப்பூணித் துறை தொகுதியிலும் களமிறக்கலாம் என கட்சி நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதேசமயம் திருப்பூணித்துறை தொகுதியில் பிரபல பேராசிரியர் துறவூர் விஷ்வம்பரன் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட முடிவு செய்து அங்கு வேலைகளையும் தொடங்கி விட்டார். இதனால் திருப்பூணித்துறையில் ஸ்ரீசாந்த்தை களமிறக்க அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சுரேஷ்கோபியும் போட்டியிட மறுத்துவிட்டதால் அவருக்கென ஒதுக்கப்பட்டு இருந்த திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

கேரளாவில் பாஜக, ஈழவ சமுதாய சங்கத்தை சேர்ந்த வெள்ளாப் பள்ளி நடேசன் தலைமையிலான பி.டி.ஜே.எஸ். கட்சியில் கூட்டணி அமைத்துள்ளது. அந்தகட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதம் உள்ள 111 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது. நேற்று முதற்கட்டமாக 51 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். 2–ம் கட்டவேட்பாளர் பட்டியலில் மாநில நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெறும் என தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...