தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சரும், தேர்தல்குழு செயலாளருமான ஜே.பி.நட்டா கூறியுள்ளார். தமிழக சட்ட சபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என மும்முரமான பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் கூட்டணி விஷயத்தில் தீவிரம் காட்டி வந்தது.
இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பா ளர்களின் பட்டியலுடன் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லிசென்றனர். டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தகூட்டத்தில் தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்தார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் ஜேபி.நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்காக ஏழு, எட்டு பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அவற்றை பரிசீலித்து, தமிழிசை போட்டியிடும் தொகுதியை விரைவில் அறிவிப்போம் என்றார். தமிழகத்தில் பா.ஜனதாவுடன் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும் அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுவிவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.