ஒரேகட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை இந்ததேர்தலில் பிஜேபி மாற்றிக்காட்டும்

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஒரேகட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை இந்ததேர்தலில் பிஜேபி மாற்றிக்காட்டும் என  இக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
.

அசாம் மாநிலத்தில் தேர்தல்பிரசாரம் செய்து வரும் அமித் ஷா அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:-தேசியத்தை காப்பதில் பிஜேபி எடுத்துள்ள நிலையை நாடுதழுவிய அளவில் ஒவ்வொருவரும் ஆதரிக்கிறார்கள். தேசியத்தை விவாதத்துக்க உள்ளாக்கு பவர்கள் இதை விரைவில் உணருவார்கள்.


நாங்கள் ராஷ்ட்ரா பற்றி கூறுகிறோம். இந்தகருத்தை விளக்குவதற்கு ஆங்கிலத்தில் வார்த்தை இல்லை. ஒட்டு மொத்த கலாச்சாரம் பற்றி நாங்கள் பேசுகிறோம். இதைவிளக்குவதற்கும் ஆங்கிலசொல் அகராதியில் வார்த்தை இல்லை. அதனால்தான் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் மத சார்பின்மையை குறிப்பிடலாம். இதற்கு சர்வ தர்மா, சம்பகாவ் போன்றவற்றை அர்த்தமாக கொள்ளலாம். ஆனால் சிலர் வேறுவிதமாக விளக்கம் அளிக்கிறார்கள்.


சட்ட  விரோதமான குடியேற்றத்தை தவிர்ப்பதற்காக இந்தியாவங்கதேச எல்லையை மூட வலியுறுத்தி தொலை நோக்கு திட்டத்தை வெளியிட்டு இருக்கிறோம். அசாம் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்  என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.

அசாம்தவிர பிற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பிஜேபியின் செயல்பாடு நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில்கூட தற்போதைய ஆட்சியை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.


 எல்லா மாநிலத்திலும் ஊழலை ஒழிக்கவே பிஜேபி பாடுபடுகிறது. பிஜேபி என்பது இந்திபேசும் மாநிலங்களில் உள்ளகட்சி என்பதை மாற்றி காட்டுவோம். கேளா, தமிழ்நாட்டில் இந்த தடவை  ஒரேகட்சிக்கு வாக்களிக்கும் பாரம்பரிய வாக்காளர்களை மாற்றி காட்டுவோம். தேர்தல்முடிவு வரும்போது நீங்கள் இதை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.