பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, அவரைகொல்ல சதித் திட்டம் தீட்டிய பெண் தீவிரவாதி இஷ்ரத்ஜகான், என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். மோடியை அரசியல் ரீதியாக சமாளிக்க முடியாததால், அவர் கொல்லப்பட வேண்டும் என்று காங்கிரஸ்கட்சி விரும்பியது.
சதித்திட்டம் உருப் பெறுவதை அக்கட்சி மவுனமாக வேடிக்கை பார்த்தது. சோனியா காந்தியே இதில் தீவிரமாக
ஈடுபட்டார். என் கவுண்ட்டருக்கு பிறகு அவர் ஆமதாபாத்துக்கு சென்று, தீவிரவாத சதித்திட்டம் குறித்து உளவுத் துறை தகவல் எதுவும் வரவில்லை என்று கூறினார். மோடிக்கு எதிரான தீவிரவாத சதித் திட்டத்தை அவர் குறைத்து மதிப்பிட்டார்.
இஷ்ரத்ஜகான் என்கவுண்ட்டர் குறித்த காங்கிரஸ் மத்திய அரசின் பிரமாண மனுவை அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திருத்தினார். இதற்கு காங்கிரஸ் , குறிப்பாக சோனியாவும், ராகுலும் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.