கர்நாடக மாநில முன்னாள் உயர் கல்வித்துறை மந்திரியும், தமிழக பாஜக. தேர்தல் இணை பொறுப்பாளருமான சி.டி. ரவி எம்எல்ஏ. ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 30 ஆண்டுகளாக திறக்கப் படாமல் இருந்த திருவள்ளுவர் சிலை தொடர்பான பிரச்சினையை பாஜக. தீர்த்துவைத்து, சிலையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள காவிரி உள்ளிட்ட அனைத்து தேசியநதிகளையும் இணைப்பதற்கு உண்டான திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலும் கர்நாடக மாநிலத்திலும், பா.ஜ.க. வெற்றிபெற்றால், காவிரி தென்பெண்ணை நதி பிரச்சினையை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
வருகிற மே மாதம் 6–ந்தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி, ஓசூர் வருகிறார். இங்கு போட்டியிடும் பாஜக. வேட்பாளருக்கு ஆதரவாக தனது முதற்கட்டபிரசாரத்தை தொடங்க உள்ளார்.
தமிழகத்தில் திமுக., அதிமுக. கட்சிகளே மாறி, மாறி அதிகாரத்திற்கு வருகின்றன. அவர்கள் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் பல ஆயிரம்கோடி கருப்பு பணத்தை வாக்காளர்களுக்கு வழங்க தயாராக உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரிகள் அதிமுக. மற்றும் தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் இவ்வாறு சி.டி. ரவி நிருபர்களிடம் கூறினார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.