தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என பிரிட்டனிடம் இந்தியா வலியுறுத் தியுள்ளது.
ரூ.9,400 கோடி வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத விஜய்மல்லையா இப்போது பிரிட்டனில் தங்கியுள்ளார். தாம் இந்தியாவுக்கு வர இது சரியானநேரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு அவரது கடவுச்சீட்டை முடக்கியுள்ளது. மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅரசு கூறியுள்ளது.
இந்நிலையில், தில்லியில் வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இது தொடர்பாகக் கூறியதாவது:
இந்தியாவில் கருப்புப்பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது தவிர வங்கி கடன்களைத் திருப்பி செலுத்தாத குற்றச் சாட்டும் அவர் மீது உள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகவேண்டிய அவசியம் உள்ளது. எனவே, விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு கடிதம் எழுதப் பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடமும் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் விகாஸ் ஸ்வரூப்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.